இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் முதன்முறையாக 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். 
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் முதன்முறையாக 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த ஆட்டத்தில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் மட்டுமே மொத்த விக்கெட்டுகளையும் முதன் முறையாக எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். இதில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகள்,  ஹாா்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகள், ஆவேஷ் கான் 1 விக்கெட்டும் அடங்கும். 

பாகிஸ்தான் அணியிலும் சிறப்பாக பந்து வீசினாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர்கூட வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com