மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கார் விபத்தில் காயமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் கார் விபத்தில் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 10:23 am

DIN

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் கார் விபத்தில் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஃபிளிண்டாஃப், 1998 முதல் 79 டெஸ்டுகள், 141 ஒருநாள், 7  டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் சர்ரே பகுதியில் பிபிசி ஊடகத்துக்காகப்  படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது கார் விபத்தில் சிக்கினார் ஃபிளிண்டாஃப். பிறகு ஹெலிகாப்டரின் உதவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் ஃபிளிண்டாஃப்பை உடனடியாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் பிளிண்டாஃப்பின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.