ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள்.
ஜெகதீசன்
ஜெகதீசன்

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. 

கடந்த மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. 

இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப தற்போது 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  

ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளிலிருந்து தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வானார்கள். ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி. அடுத்த இடத்தில் ராஜஸ்தான். 9 வீரர்கள் ரூ. 33.45 கோடிக்குத் தேர்வானார்கள்.

இம்முறை 16 தமிழக வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளார்கள்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் 16 தமிழக வீரர்கள்

1. என். ஜெகதீசன்
2. எம். அஸ்வின்
3. பாபா இந்திரஜித்
4. அஜித் ராம்
5. சந்தீப் வாரியர்
6. ஹரி நிஷாந்த்
7. எம். சித்தார்த்
8. சஞ்சய் யாதவ்
9. அஜிதேஷ்
10. சுரேஷ் குமார்
11. ராக்கி பாஸ்கர்
12. அனிருத் சீதாராம்
13. பி. சூர்யா
14. சோனு யாதவ்
15. பாபா அபரஜித்
16. திரிலோக் நாக்

2023 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள்

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்

1. எம். அஸ்வின் (மும்பை)
2. சஞ்சய் யாதவ் (மும்பை)
3. என். ஜெகதீசன் (சிஎஸ்கே)
4. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)
5. பாபா இந்திரஜித் (கேகேஆர்) 

ஐபிஎல் 2023 வீரர்கள் ஏலம்

பங்கேற்கும் வீரர்கள்: 405
தேர்வாகப் போகும் வீரர்கள்: 87 (மொத்த எண்ணிக்கை)
தேர்வாகப் போகும் வெளிநாட்டு வீரர்கள்: 30

ஏலத்தில் பங்கேற்கும் அணிகளிடம் உள்ள தொகை

ஹைதராபாத் - ரூ. 42.25 கோடி
பஞ்சாப் - ரூ. 32.20 கோடி
லக்னெள - ரூ. 23.35 கோடி
மும்பை - ரூ. 20.55 கோடி
சென்னை - ரூ. 20.45 கோடி
தில்லி - ரூ. 19.45 கோடி
குஜராத் - ரூ. 19.25 கோடி
ராஜஸ்தான் - ரூ. 13.2 கோடி
பெங்களூர் - ரூ.  8.75 கோடி
கொல்கத்தா - ரூ. 7.05 கோடி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com