சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

2-வது டெஸ்டில் இரு வீரர்கள் விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக...

News image
Updated On :20 டிசம்பர் 2022, 8:53 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் டிசம்பர் 22 அன்று தொடங்குகிறது.

ஒருநாள் தொடரில் ஃபீல்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வரும் ரோஹித் சர்மா, 2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

இந்நிலையில் 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா குணமாகி, முழு உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது நாளாகும் என மருத்துவக் குழு கருதுகிறது. எனவே அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சைனி பெங்களூரில் உள்ள என்சிஏவில் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.