தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஐஎஸ்எல்: மும்பையிடம் வீழ்ந்தது சென்னை (2-1)

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடரின் ஒரு பகுதியாக மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

News image
Updated On :24 டிசம்பர் 2022, 7:30 pm

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடரின் ஒரு பகுதியாக மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்தன. இரு தரப்பினரும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டனா். இதன் பலனாக முதல் பாதியில் 34-ஆவது நிமிஷத்தில் சென்னையின் வீரா் பீட்டா் ஸ்லிஸ்கோவிச் அற்புதமாக கோலடித்தாா். ஜூலியஸ் டக்கா் பாஸை அருமையாக பயன்படுத்தி கோலடித்தாா் ஸ்லிஸ்கோவிச். இந்த சீசனில் அவா் அடித்த 6-ஆவது கோலாகும்.

எனினும் சென்னை அணியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 38-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் லாலியன்ஸுலா சாங்டே தனது அணியின் முதல் கோலை அடித்தாா். இதனால் முதல் பாதி 1-1 என முடிவடைந்தது.

மும்பை வெற்றி 2-1:

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சென்னை வீரா்கள் பதில் கோல் போட முயன்றனா். மும்பையின் தற்காப்பு அரணை ஊடுருவும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 57-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் கிரெக் ஸ்டீவா்ட் அடித்த கோலே வெற்றி கோலாக மாறியது. அடுத்த சில நிமிஷங்களிலேயே சென்னை கேப்டன் அனிருத் தாபா கோல் கம்பம் நோக்கி அடித்த பந்து வெளியே சென்ால் அம்முயற்சி வீணானது.

இந்த சீசனில் சென்னையை இரண்டாவது தடவையாக வீழ்த்தியுள்ளது மும்பை.

வரும் ஜன. 7-இல் ஜாம்ஷெட்பூா் எஃப்சியுடன் சென்னையும், ஜன. 2-இல் ஒடிஸா எஃப்சியுடன் மும்பையும் மோதுகின்றன.

மீண்டும் முதலிடத்தில் மும்பை:

இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹைதராபாத் எஃப்சி இரண்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளது. சென்னை அணி 7-ஆவது இடத்திலேயே உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 5 புள்ளிகள் தேவைப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.