இந்த இரு வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை?: வெங்சர்கார் கேள்வி

இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்யாதது ஏன் என முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ருதுராஜ்
ருதுராஜ்

இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்யாதது ஏன் என முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணி குறித்து முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் திலீப் வெங்சர்கார் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணியைச் சரியாகத் தேர்வு செய்யவில்லை. ருதுராஜ், சர்ஃபராஸ் கானைத் தேர்வு செய்யாதது பற்றி என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்? இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அணியைப் பார்க்கும்போது, சில வீரர்கள், அவர்கள் திறமைசாலிகளாக இருந்தபோது அணியில் இடம்பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அணியில் இடம்பெறும் ஒவ்வொரு வீரரும் அதற்கான பங்களிப்பை அளித்திருக்க வேண்டும். ருதுராஜ், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறக்கூடிய தகுதி கொண்டவர்கள். தேர்வு செய்யாததன் மூலம் அவர்களுடைய மனவுறுதியைத் தேர்வுக்குழுவினர் கலைத்துள்ளார்கள் என்றார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் இடம்பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் அணியில் அவர் இல்லை. மும்பை பேட்டரான சர்ஃபராஸ், நடப்பு ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரத்துக்கு எதிராக 275 ரன்களைச் சமீபத்தில் எடுத்துள்ளார். 2019 முதல் 9 ஆட்டங்களில் 1995 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com