டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டி20 தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது இந்திய அணி.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:45 pm

DIN

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 3-0 என கைப்பற்றி முழுமையான வெற்றியை அடைந்தது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184/5 ரன்களைக் குவித்தது. இளம் வீரா்கள் சூரியகுமாா் யாதவ்-வெங்கடேஷ் ஐயா் இணைந்து அதிரடியாக ஆடி சிக்ஸா்கள், பவுண்டரிகளாக விளாசி 5-ம் விக்கெட்டுக்கு 91 ரன்களைச் சோ்த்தனா். சூரியகுமாா் யாதவ் 7 சிக்ஸா்கள், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 66 ரன்களை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.  2 சிக்ஸா்கள், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா் வெங்கடேஷ் ஐயா். பின்னா் ஆடிய மே.இ. தீவுகள் அணி 20 ஓவா்களில் 167/9 ரன்களை மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் 3 சிக்ஸா்களை விளாசிய ரோமாரியோ ஷெப்பா்ட் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.

இந்த வெற்றியினால் இந்திய அணி டி20 தொடரை 3-0 என வென்றது. ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது இந்திய அணி.

ஆடவர் டி20 தரவரிசை

1) இந்தியா - 269 புள்ளிகள்
2) இங்கிலாந்து - 269 புள்ளிகள்
3) பாகிஸ்தான் - 266 புள்ளிகள்
4) நியூசிலாந்து - 254 புள்ளிகள்
5) தென்னாப்பிரிக்கா - 253 புள்ளிகள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.