தெ.ஆ. அணியை மீட்டு வந்த ரபாடா: அரை சதங்கள் எடுத்து ஆட்டமிழந்த புஜாரா, ரஹானே

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா ரஹானாவும் அரை சதங்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளையின்போது.....
தெ.ஆ. அணியை மீட்டு வந்த ரபாடா: அரை சதங்கள் எடுத்து ஆட்டமிழந்த புஜாரா, ரஹானே

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா ரஹானாவும் அரை சதங்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ஜொகன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கினார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வானார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வானார்கள்.  

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது.

நேற்றிரவு மாலையில் எப்படி விளையாடினார்களோ அதேபோல இன்றும் புஜாராவும் ரஹானேவும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். முதல் 10 ஓவர்களில் இருவரும் 52 ரன்களை எடுத்தார்கள். இதனால் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.

62 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் புஜாரா. 10 பவுண்டரிகள். மிகவும் வித்தியாசமான ஆட்டத்தை இன்று அவர் வெளிப்படுத்தினார். புஜாரா - ரஹானே கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 122 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தது. ரஹானே 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 67 பந்துகளில் அரை சதம் எட்டினார். இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களைத் தாண்டியது. இந்திய ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் ரபாடா அவர்களுடைய கனவைக் கலைத்தார்.

58 ரன்கள் எடுத்த ரஹானே, ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் புஜாராவை 53 ரன்களில் வீழ்த்தினார் ரபாடா. ஒரு ரன்னும் எடுக்காத ரிஷப் பந்த் மோசமான ஷாட்டை விளையாடி ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் அடித்த அஸ்வின் 16 ரன்களில் என்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 3-வது நாள் உணவு இடைவேளையின்போது 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் 161 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஹாரி 6, ஷர்துல் தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com