ஆஷஸ் 4-வது டெஸ்ட்: பேர்ஸ்டோ சதம், இங்கிலாந்து 258/7

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஷஸ் 4-வது டெஸ்ட்: பேர்ஸ்டோ சதம், இங்கிலாந்து 258/7
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

4-வது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது. ஹசீப் ஹமீது, ஸாக் கிராவ்லி தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று வழக்கம்போல இங்கிலாந்து பேட்டர்களின் விக்கெட்டுகளைக் கடகடவென எடுக்க ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. இதனால் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து. இதன்பிறகு ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். இருவரும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 91 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து மார்க் வுட் ஆட்டமிழந்தார். இன்றைய நாளின் கடைசி ஓவரில் பேர்ஸ்டோ சதத்தைப் பூர்த்தி செய்தார். 140 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில் 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 158 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com