தெ.ஆ. டெஸ்ட்: நன்றாக விளையாடி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த புஜாரா

தெ.ஆ. டெஸ்ட்: நன்றாக விளையாடி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த புஜாரா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதனால் 12 ரன்களில் ஆலிவியரிடம் கே.எல். ராகுலும் 15 ரன்களில் ரபாடாவிடம் மயங்க் அகர்வாலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு புஜாராவும் கோலியும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 4 பவுண்டரிகள் அடித்து சுறுசுறுப்பாக இயங்கினார்.

இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. புஜாரா 26, கோலி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தெ.ஆ. அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்தாலும் கோலியும் புஜாராவும் கவனமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 132 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். 77 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த புஜாரா, ஜேன்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நன்கு விளையாடிய புஜாரா அரை சதமாவது எடுப்பார் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். 

இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 19, ரஹானே 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com