

ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது ஆஸ்திரேலியா. இதையடுத்து தரவரிசையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளைப் பின்னுக்குத் தள்ளி நெ.1 இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இதன்மூலம் மிகச்சிறப்பான முறையில் தன்னுடைய புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நெ.1 டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததாலும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதாலும் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. நியூசிலாந்து அணி 2-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
டெஸ்ட் தரவரிசை
1. ஆஸ்திரேலியா
2. நியூசிலாந்து
3. இந்தியா
4. இங்கிலாந்து
5. தென்னாப்பிரிக்கா
6. பாகிஸ்தான்
7. இலங்கை
8. மேற்கிந்தியத் தீவுகள்
9. வங்கதேசம்
10. ஜிம்பாப்வே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.