ஐசிசி ஒருநாள் அணியிலும் இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
By DIN | Published On : 20th January 2022 02:15 PM | Last Updated : 20th January 2022 02:15 PM | அ+அ அ- |

2021-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி நேற்று வெளியிட்ட 2021-ம் ஆண்டுக்கான டி20 அணியிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்த அணியில் பாகிஸ்தான், அயர்லாந்து, தெ.ஆ., வங்கதேச அணி வீரர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
2021-ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் அணி
பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து)
மலான் (தெ.ஆ.)
பாபர் அஸாம் (கேப்டன், பாகிஸ்தான்)
ஃபகார் ஸமான் (பாகிஸ்தான்)
வான் டெர் டுசன் (தெ.ஆ.)
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர், வங்கதேசம்)
வனிந்து ஹசரங்கா (இலங்கை)
சிமி சிங் (அயர்லாந்து)
துஷ்மந்தா சமீரா (இலங்கை)