இங்கிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இன்று (ஜூலை 1) தொடங்குகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன.
ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக 5-வது டெஸ்டில் இடம்பெறாத கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் கேப்டனாகச் செயல்படவுள்ளார். 5-வது டெஸ்டில் இடம்பெற்றுள்ள கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், பும்ரா, ஜடேஜா ஆகியோர் முதல் டி20-யில் மட்டும் விளையாட மாட்டார்கள். 2-வது மற்றும் 3-வது டி20 ஆட்டங்களில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை. அதேபோல வேகப்பந்து வீச்சாளர் ஷமி டி20 அணியில் இடம்பெறவில்லை. உம்ரான் மாலிக், தீபக் ஹூடா ஆகிய இருவரும் டி20 அணியில் உள்ளார்கள்.
ஒருநாள் அணியில் அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவன், பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்ஷர் படேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக தீபக் சஹார், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்டியா, ஜடேஜா, சஹால், அக்ஷர் படேல், பிஷ்னாய், பும்ரா, புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.
(முதல் டி20 ஆட்டத்தில் மட்டும் ருதுராஜ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.)
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், சஹால், அக்ஷர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஷமி, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


