இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் எப்போது விளையாடப் போகிறது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்டுகள் மீதமுள்ளன.
இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் எப்போது விளையாடப் போகிறது?

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இப்போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்துக்குச் சென்று 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இவை தான் அதிகாரபூர்வமாக அட்டவணையுடன் அறிவிக்கப்பட்ட தொடர்கள், போட்டிகள். 

நீங்கள் டெஸ்ட் பிரியராக இருந்தால் இந்திய அணி அடுத்ததாக எப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்கப் போகிறது என்கிற கேள்வியைக் கேட்பீர்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்டுகள் மீதமுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகள்.

டிசம்பரில் வங்கதேசத்துக்குச் சென்று 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இந்திய அணி. அதன்பிறகு 2023 தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த 6 டெஸ்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com