கலப்பு இரட்டையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிா்ஸா ஜோடி தோல்வி கண்டது. டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் சானியாவுக்கு இது கடைசி விம்பிள்டன் போட்டியாகும்.
குரோஷியாவின் மேட் பாவிச்சுடன் இணைந்து களம் கண்ட சானியா, 6-4, 5-7, 4-6 என்ற செட்களில் இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி/அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக் கூட்டணியிடம் தோல்வி கண்டாா்.
ஆட்டத்துக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட சானியா, ‘கண்ணீா், போராட்டம், மோதல், முயற்சி என இந்த டென்னிஸுக்காக மேற்கொண்ட எல்லாவற்றுக்குமே முடிவில் மதிப்பு இருக்கிறது. இந்த முறை வெற்றி இல்லாவிட்டாலும், கடந்த காலங்களில் வென்றதும், கடந்த 20 ஆண்டுகளாக விளையாடியதும் கௌரவமாகும். மீண்டும் சந்திக்கும் வரை விம்பிள்டனை ‘மிஸ்’ செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



