100 மீ. ஓட்டப் பந்தயத்தில் தங்கம்: சாதித்த 94 வயது சிங்கப்பெண்! (படங்கள்)

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 94 வயது பஹ்வானி தேவி தாகர் தங்கம் வென்றுள்ளார்.
100 மீ. ஓட்டப் பந்தயத்தில் தங்கம்: சாதித்த 94 வயது சிங்கப்பெண்! (படங்கள்)

ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 94 வயது பஹ்வானி தேவி தாகர் தங்கம் வென்றுள்ளார்.

100 மீ. ஓட்டத்தை 24.74 விநாடிகளில் கடந்து அவர் தங்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் அவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பஹ்வானி தேவி, ஹரியாணாவைச் சேர்ந்தவர். 

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடகளப் போட்டியாக உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 

94 வயதில் தங்கம் வென்ற பஹ்வானி தேவிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். ஃபின்லாந்திலிருந்து தில்லி திரும்பிய பஹ்வானி தேவிக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com