/

ஒன் டே கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (31), சர்வதேச ஒன் டே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். அவர் சர்வதேச  டி20, டெஸ்ட் ஃபார்மட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

DIN

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (31), சர்வதேச ஒன் டே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். அவர் சர்வதேச  டி20, டெஸ்ட் ஃபார்மட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதும் ஒன் டே தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அந்த முதல் ஆட்டமே ஸ்டோக்ஸின் கடைசி ஓன் டே ஆகும். 
தற்போது இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் ஸ்டோக்ஸ், ஒன் டேயில் இதுவரை 104 ஆட்டங்களில் 2,919 ரன்கள் அடித்ததுடன், 74 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறார். ஸ்டோக்ஸ், 2011-இல் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஓன் டே-யில் அறிமுகமானார். 

கடந்த 2019-இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான ஸ்டோக்ஸின் அதிரடி என்றும் அந்த அணியின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும். அவர் ஆட்டமிழக்காமல் விளாசிய 84 ரன்களால், அந்த ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி நகர, அதில் வென்று தனது முதல் 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து. 

ஓய்வு முடிவு குறித்து பேசிய ஸ்டோக்ஸ், "இந்த ஃபார்மட்டில் இனியும் என்னால் நிலைத்து ஆட இயலும் எனத் தோன்றவில்லை. எனது 100 சதவீத ஆட்டத்தையும் அளிக்க முடியாது என்ற காரணத்தால் இந்தக் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். 

இந்த ஃபார்மட்டில் எனது அணியினருடன் இணைந்து ஆடிய ஒவ்வொரு தருணமும் சிறப்பானதாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.