ஒருநாள் கிரிக்கெட் செத்துக் கொண்டிருக்கிறது: வாசிம் அக்ரம்

ஒருநாள் கிரிக்கெட் சற்று இழுவையாக உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் செத்துக் கொண்டிருக்கிறது: வாசிம் அக்ரம்

டெஸ்ட், டி20யே போதும், ஒருநாள் கிரிக்கெட் இனி தேவையில்லை என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது. 

இதுபற்றி ஒரு பேட்டியில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட் ஒதுக்கப்பட வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஒருநாள் ஆட்டங்கள் இங்கிலாந்தில் நடைபெற்றால் மைதானம் நிரம்பியிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் முக்கியமாக இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பாது. ஒருநாள் ஆட்டத்தை நடத்தவேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். 

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களுக்கு அதிரடியாக விளையாடுகிறார்கள். பிறகு 40 ஓவர்கள் வரை ஒரு பந்துக்கு ஒரு ரன், அவ்வபோது பவுண்டரிகள் என்கிற கணக்கில் விளையாடுகிறார்கள். 40 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த பிறகு கடைசி 10 ஓவர்களுக்கு மீண்டும் அதிரடியாக விளையாடுகிறார்கள். ஸ்டோக்ஸ் ஓய்வு வருத்தமான விஷயம். தொலைக்காட்சி வர்ணனையாளராகப் பார்க்கும்போதும் ஒருநாள் கிரிக்கெட் சற்று இழுவையாக உள்ளது. வீரர்களுக்கும் அதில் விளையாடுவது சிரமம். டி20 வந்தபிறகு பல நாள்களுக்கு விளையாடுவது போல உள்ளது. ஆனால் டி20 என்பது சுலபமானது. பந்துவீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசினால் போதும். லீக் கிரிக்கெட்டில் நிறைய பணம் புரள்கிறது. ஒருநாள் கிரிக்கெட் செத்துக்கொண்டிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் நல்ல மதிப்பு கிடைக்கும். பணம் முக்கியம் தான். கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்பட வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com