மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவன் 97 ரன்களும் ஷுப்மன் கில் 64 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்தார்கள்.
மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கைல் மேயர்ஸ் 75 ரன்களும் புரூக்ஸ் 46 ரன்களும் பிரண்டன் கிங் 54 ரன்களும் எடுத்தார்கள். கடைசிப் பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் சிராஜ் அருமையாக யார்க்கர் வீசி இந்திய அணிக்கு வெற்றியைப் பரிசாக அளித்தார். இந்திய அணியின் தரப்பில் சிராஜ், தாக்குர், சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஷிகர் தவன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலப்பதிகாரத்தில் சனாதனம்

ஒரே காட்சியில் பான் இந்திய சூப்பர் ஸ்டார்கள்!

இந்திய விடுதலைப் போரில் நியோகி ஜகன்னாத ஐயர்

சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளர் பாரி வேட்பு மனு நிராகரிப்பு! அடுத்து என்ன?
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


