அயர்லாந்து டி20 தொடர்: ஹார்திக் பாண்டியா கேப்டன்
By DIN | Published On : 15th June 2022 08:45 PM | Last Updated : 15th June 2022 08:45 PM | அ+அ அ- |

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. அங்கு ஜூன் 26 மற்றும் ஜூன் 28-ல் இரண்டு ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வீரர்கள் டி20 தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் கேப்டனாக வழிநடத்தும் ரிஷப் பந்த் பெயர்கள் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க | இது புதிய பாணி: அணியை மாற்றாமல் சாதித்த ராகுல் டிராவிட்
இதன் காரணமாக புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ஹார்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.