லயனுக்கு 5 விக்கெட்டுகள்: 212 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி
By DIN | Published On : 29th June 2022 04:55 PM | Last Updated : 29th June 2022 04:55 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
காலேவில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸி. அணி ஆரம்பம் முதல் சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை பேட்டர்கள் தடுமாறினார்கள். இதனால் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தன. விக்கெட் கீப்பர் பேட்டர் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் விரைவாக ரன்கள் சேர்த்து 58 ரன்கள் எடுத்தார்.
84 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் திமுத் கருணாரத்னே 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 59 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லயன் 5 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.