சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி?: தமிழக முதல்வரைச் சந்தித்த செஸ் சம்மேளன அதிகாரி

2022 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது.
தமிழக முதல்வரைச் சந்தித்த இந்திய செஸ் சம்மேளனத்தின் அதிகாரிகள் (படம் - twitter.com/aicfchess)
தமிழக முதல்வரைச் சந்தித்த இந்திய செஸ் சம்மேளனத்தின் அதிகாரிகள் (படம் - twitter.com/aicfchess)


செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார் அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பரத் சிங் செளகான்.

இரு வருடங்களுக்கு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதுண்டு. 2020-ல் இணையம் வழியாக நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரஷியாவும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன. இரு வாரங்களுக்கு நடைபெறும் இப்போட்டியில் 190 நாடுகள் கலந்துகொள்ளும். செஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 2500 பேர் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் நகருக்கு வருகை தருவார்கள். 

2022 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போர்ச்சூழல் காரணமாக அப்போட்டி ரஷியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இந்தியா ஆர்வம் காண்பித்துள்ளது. சென்னை, தில்லி, ஒடிஷா ஆகிய நகரங்களில் நடத்த அகில இந்திய செஸ் சம்மேளனம் முடிவெடுத்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது,.

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பரத் சிங் செளகான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து இதுகுறித்துப் பேசியுள்ளார். அடுத்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், தில்லி முதலமைச்சர் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். மென்பொருள் நிறுவனங்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரதாரராகப் பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியை நடத்த ரூ. 75 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com