பாகிஸ்தான் வீரருக்கு கரோனா: ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகல்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணி (கோப்புப் படம்)
பாகிஸ்தான் அணி (கோப்புப் படம்)

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில்  பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். மாற்று வீரராகத் தேர்வான நசீம் ஷா, பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பி.எஸ்.எல். போட்டியில் காயமடைந்ததால் முதல் டெஸ்டிலிருந்து ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய இருவரும் விலகினார்கள். இதனால் ஹாரிஸ் ராஃப் முதல் டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

திங்கள் அன்று ஹாரிஸுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் நேற்று எடுக்கப்பட்ட ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் ஹாரிஸுக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் அனைத்து வீரர்களுக்கும் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாரிஸ் ராஃப், 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

28 வயது ஹாரிஸ் ராஃப், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடியதில்லை. 8 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com