பயிற்சியாளரைப் பிரிந்தார் ஜோகோவிச்

என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களில் மரியன் என்னுடன் இணைந்திருந்தார்.
பயிற்சியாளரைப் பிரிந்தார் ஜோகோவிச்

நீண்ட காலமாகத் தனக்குப் பயிற்சியளித்த மரியன் வாய்டாவைப் பிரிந்துவிட்டதாகப் பிரபல வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேகியாவைச் சேர்ந்த மரியன் வாய்டாவுடன் இணைந்து 2006 முதல் பயிற்சி பெற்று வந்தார் ஜோகோவிச். இருவரும் 2017-ல் ஒரு வருடம் பிரிந்திருந்தார்கள். பிறகு மீண்டும் இணைந்த நிலையில் கடந்த வருட ஏடிபி ஃபைனஸ் போட்டிக்குப் பிறகு மரியனிடமிருந்து விலகிவிட்டதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களில் மரியன் என்னுடன் இணைந்திருந்தார். அவரும் நானும் பல சாதனைகள் புரிந்துள்ளோம். கடந்த 15 வருடங்களாக அவருடைய நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

ஜோகோவிச்சுடனான என்னுடைய காலகட்டத்தில் அவருடைய இன்றைய வளர்ச்சியை நேரில் கண்டுள்ளேன். அக்காலகட்டத்தை இனி மிகப் பெருமிதத்துடன் எண்ணுவேன் என்று மரியன் கூறியுள்ளார். 

கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா் ஜோகோவிச். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com