சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷியா, பெலாரஸ் அணிகள் பங்கேற்பதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச செஸ் சம்மேளனம்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை


சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷியா, பெலாரஸ் அணிகள் பங்கேற்பதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச செஸ் சம்மேளனம்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போர்ச்சூழல் காரணமாக அப்போட்டி ரஷியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் தொடக்கத்தில் போட்டி நிறைவுபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல விளையாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷியாவும் பெலாரஸும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிந்துரைப்படி எஃப்ஐடிஇ போட்டிகளில் இரு நாடுகளும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன்படி ரஷியா, பெலாரஸால் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க முடியாது. 1976-ல் அரசியல் காரணமாக ரஷியாவும் சில நாடுகளும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவில்லை. ஒலிம்பியாட் போட்டியில் 8 முறை தங்கம் வென்றுள்ளது ரஷிய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com