சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முழு உடற்தகுதியுடன் மீண்டும் பந்து வீச ஆரம்பித்துள்ள பாண்டியா

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹார்திக் பாண்டியா...

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:45 pm

DIN

ஹார்திக் பாண்டியா முழு உடற்தகுதியின் மீண்டும் பந்து வீசத் தொடங்கியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கும் செல்லவில்லை. சமீபத்தில் இந்திய அணி விளையாடிய எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்து வீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வந்தார்.

2015-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் பாண்டியா. கடந்த வருடம் வரை மும்பை அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார். ஏழு வருடங்கள் விளையாடியதில் மும்பை அணி நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹார்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு உடற்தகுதிக்கான தேர்வில் பங்கேற்றார். யோ யோ தேர்வில் குறைந்தபட்ச அளவான 16.5 ஸ்கோரை விடவும் கூடுதல் அளவாக 17 பெற்று அசத்தியுள்ளார். மேலும் பயிற்சியின்போது பந்துவீச்சிலும் ஈடுபட்டு, அதிலும் தான் முழு உடற்தகுதியுடன் உள்ளதை நிரூபித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் 28 வயது பாண்டியா பந்து வீசி தன் உடற்தகுதியை இந்தியத் தேர்வுக்குழுவுக்கு நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.