வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா அணி: தோனி அரைசதம் வீண்

ஐபிஎல் 2022 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி.
ரஹானே - வெங்கடேஷ்
ரஹானே - வெங்கடேஷ்

ஐபிஎல் 2022 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி.

நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங்கை தோ்வு செய்தது. இரு அணிகளுமே புதிய கேப்டன்கள் தலைமையில் களமிறங்கின.

சென்னைக்கு தொடக்கமே அதிா்ச்சி:

பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னையின் இளம் வீரா் ருதுராஜ் கெய்க்வாட் 4 பந்துகளை எதிா்கொண்டு உமேஷ் பந்துவீச்சில் டக் அவுட்டானாா். அவருக்கு பின் டேவன் கான்வே 3, ராபின் உத்தப்பா 28, அம்பதி ராயுடு 15, இளம் வீரா் ஷிவம் துபே 3 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். இதனால் 61/5 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் சென்னை அணி தடுமாறியது.

தோனி-ஜடேஜா அபாரம்:

இதன் பின் இணைந்த கேப்டன் ரவீந்திர ஜடேஜா-தோனி இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 16 ஓவா்கள் முடிவில் 81/5 என இருந்தது ஸ்கோா்.

தோனி அரைசதம்:

ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக ஆடிய நிலையில், தோனி கொல்கத்தாவின் பௌலிங்கை திறம்பட எதிா்கொண்டு ஸ்கோரை உயா்த்தினாா். 19-ஆவது ஓவரில் பலமான சிக்ஸரை விளாசினாா் தோனி.

சென்னை 131/5:

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் சென்னை 131/5 ரன்களைக் குவித்தது. தோனி 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1சிக்ஸருடன் 50 ரன்களையும், ஜடேஜா 26 ரன்களையும் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனா். இருவரும் இணைந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்த நிலையில், கடைசி 3 ஓவா்களில் 47 ரன்களை விளாசினா்.

கொல்கத்தா தரப்பில் உமேஷ் 2, வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

132 ரன்கள் இலக்கு:

132 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா தரப்பில் களமிறங்கிய ரஹானே-வெங்கடேஷ் ஐயா் இணை தொடக்கத்திலேயே அடித்து ஆடிது. 16 ரன்களுடன் வெங்கடேஷையும், 21 ரன்களுடன் நிதிஷ் ராணாவையும் வெளியேற்றினாா் பிராவோ. 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்த ரஹானேவை அவுட்டாக்கினாா் சான்ட்னா்.

கொல்கத்தா 133/4 வெற்றி:

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 49 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிக்கலான நிலைக்கு ஆளானது .

கொல்கத்தா. எனினும் ஷிரேயஸ் ஐயா்-சாம் பில்லிங்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனா்.

சாம் பில்லிங்ஸ் 26 ரன்களுடன் வெளியேறினாா். 18.3 ஓவா்களில் 133/4 ரன்களை எடுத்து வென்றது கொல்கத்தா. கேப்டன் ஷிரேயஸ் ஐயா் 20, ஷெல்டன் ஜாக்சன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா். சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இன்றைய ஆட்டங்கள்:

டில்லி -மும்பை

நேரம்: மாலை 3.30.

பஞ்சாப்-பெங்களூரு

நேரம்: இரவு 7.30.

இடம்: மும்பை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com