ஆஸ்கர் விழாவில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (படங்கள்)
ஆஸ்கர் விழாவில் தனது சகோதரியுடன் கலந்துகொண்டார் செரீனா வில்லியம்ஸ்...


பிரபல் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாறு கிங் ரிச்சர்ட் என்கிற பெயரில் கடந்த வருடம் வெளிவந்தது. செரீனாவும் அவருடைய சகோதரியும் மற்றொரு டென்னிஸ் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸும் இப்படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினார்கள். ரிச்சர்ட் வில்லியம்ஸ் வேடத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார்.
இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.
இந்நிலையில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
ஆஸ்கர் விழாவில் தனது சகோதரியுடன் கலந்துகொண்டார் செரீனா வில்லியம்ஸ். விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...