பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள்: அதிரடியாக விளையாடி சதமடித்த டிராவிஸ் ஹெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள்: அதிரடியாக விளையாடி சதமடித்த டிராவிஸ் ஹெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.

3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து இரு அணிகளும் லாகூரில் நடைபெறும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் பங்கேற்கின்றன.

டெஸ்டில் பங்கேற்ற பல வீரர்கள் ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டேவிட் வார்னர், ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் போன்றோரும் இல்லை. இந்நிலையில் ஆஸி. வீரர்களான ஜோஷ் இங்லிஷும் அஷ்டன் அகரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அணியில் 13 வீரர்கள் மட்டுமே உள்ள நிலையில் லாகூரில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நாதன் எல்லீஸ், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியிலும் 34 வயது லெக் ஸ்பின்னர் ஸாகித் முகமது, இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் என இரு வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். டெஸ்ட் தொடரில் விளையாடிய ஷாஹீன் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட்டும் கேப்டன் ஃபிஞ்சும் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தார்கள். ஃபிஞ்ச் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார் ஹெட். இதன்பிறகு தொடர்ந்து அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக விரைவாக சதமடித்த ஆஸி. வீரர் என்கிற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார். இது அவருடைய 2-வது ஒருநாள் சதம். பிறகு 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com