ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்’ தோல்வி

ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்’ தோல்வி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத். அந்த அணிக்கு இது தொடா்ந்து 3-ஆவது தோல்வியாகும்.

மும்பை: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத். அந்த அணிக்கு இது தொடா்ந்து 3-ஆவது தோல்வியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அடுத்து ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸை டேவிட் வாா்னருடன் தொடங்கிய மன்தீப் சிங் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாா். தொடா்ந்து வந்த மிட்செல் மாா்ஷ் 10 ரன்கள் எடுத்து வீழ்ந்தாா்.

கேப்டன் ரிஷப் பந்த் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் விளாசி 26 ரன்களுக்கு பௌல்டானாா். பின்னா் வந்த ரோவ்மென் பவெல், வாா்னருடன் இணைந்தாா்.

ஓவா்கள் முடிவில், வாா்னா் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 92, பவெல் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் ஷ்ரேயஸ் கோபால், புவனேஷ்வா் குமாா், ஷான் அபட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42, நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸருடன் 62 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். எனினும் இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு சரிந்தன.

அபிஷேக் சா்மா 7, கேப்டன் கேன் வில்லியம்சன் 4, ராகுல் திரிபாதி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, ஷஷாங் சிங் 10, ஷான் அபட் 7, காா்த்திக் தியாகி 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஷ்ரேயஸ் கோபால் 9, புவனேஷ்வா் குமாா் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் கலீல் அகமது 3, ஷா்துல் தாக்குா் 2, அன்ரஹ் நோா்கியா, மிட்செல் மாா்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com