உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஆண்டர்சன், பிராட்

டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சனும் கிறிஸ் பிராடும் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள்.

News image

ஸ்டோக்ஸ் - ஆண்டர்சன்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:47 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்குச் சுற்றுபயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன் (ஸ்டோக்ஸ்), புதிய பயிற்சியாளருடன் (மெக்குல்லம்) களமிறங்குகிறது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இரு டெஸ்டுகளுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சனும் கிறிஸ் பிராடும் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். காயம் காரணமாகக் கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்ற டான் லாரன்ஸ், கிறிஸ் வோக்ஸ், சகிப் முகமது ஆகியோர் தற்போதைய அணியில் இடம்பெறவில்லை. ஹாரி புரூக், மேத்யூ பாட்ஸ் என இரு புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

பிராட்

பிராட்

ஸ்டோக்ஸ், மெக்குல்லம் பொறுப்பில் உள்ள எங்கள் டெஸ்ட் அணியின் புதிய சகாப்தத்தின் தொடக்கம் இது என அணியை அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநர் கூறினார். 

ஜூன் 2 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடர், ஜூன் 27 அன்று நிறைவுபெறுகிறது. 

இங்கிலாந்து அணி (முதல் இரு டெஸ்டுகள்)

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஸாக் கிராவ்லி, போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், பென் ஃபோக்ஸ், கிரைக் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச், மேத்யூ பாட்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.