டி20 உலகக் கோப்பை: மழையால் அரையிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் என்ன ஆகும்?

இறுதிச்சுற்றிலும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் போனால்...
டி20 உலகக் கோப்பை: மழையால் அரையிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் என்ன ஆகும்?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சில ஆட்டங்கள் மழையால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது. அவற்றுக்குக் கூடுதல் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அடுத்த நாளில் ஆட்டத்தைத் தொடரலாம். 

அரையிறுதியில் அடுத்த நாளன்றும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் என்ன ஆகும்?

கூடுதல் நாளைப் பயன்படுத்தியும் மழையால் அரையிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் சூப்பர் 12 சுற்றில் அவரவர் குரூப் பிரிவில் முதலிடம் வகித்த இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிச்சுற்றிலும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் போனால்?

கூடுதல் நாளைப் பயன்படுத்தியும் மழையால் இறுதி ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியாவும் நியூசிலாந்தும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். உலகக் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com