டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.
அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் அடிலெய்டில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சியில் இருந்து விடுபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு மீண்டும் பயிற்சியில் இணைந்து கொண்டார். ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டதால் இந்திய ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் காயத்தால் அரையிறுதியில் ரோஹித் சர்மாவால் விளையாட முடியுமா எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் காயம் பெரிதளவில் பாதிக்காததால் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா. இதனால் அரையிறுதியில் அவர் விளையாடுவதில் எவ்வித சிரமும் இருக்காது என அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



