இந்த மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்கள்!

அடுத்த வாரம் நியூசிலாந்தில் இந்திய அணி விளையாடுகிறது. 
இந்த மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்கள்!

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கினாலும் உடனடியாக அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்கள் தொடங்கவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் அடுத்த வாரம் நியூசிலாந்தில் இந்திய அணி விளையாடுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

அதற்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் ஒருநாள் ஆட்டம் நவம்பர் 17-ல் தொடங்குகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதும் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 30 அன்று தொடங்குகிறது. இதனிடையே இலங்கையில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்குகிறது. இப்படி இந்த மாதம் மட்டும் நான்கு தொடர்கள் தொடங்கவுள்ளன.

இந்த மாதத்தில் கிரிக்கெட் தொடர்கள்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் - நவம்பர் 17 முதல்
இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் - நவம்பர் 18 முதல்
ஆப்கானிஸ்தான் - இலங்கை ஒருநாள் தொடர் - நவம்பர் 25 முதல்
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் - நவம்பர் 30 முதல் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com