தோனியைப் போல யாரும் வர முடியாது: கம்பீரின் வைரல் விடியோ!
By DIN | Published On : 12th November 2022 11:54 AM | Last Updated : 12th November 2022 11:54 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
அடிலெய்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த அளவுக்கு மோசமான தோல்வியை இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
2020 ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாளன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தோனி பற்றி கௌதம் கம்பீர் பேசிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் "100 சதங்களை முறியடிக்கவும் அதிகமான இரட்டை சதங்களை அடிக்கவும் வருங்காலத்தில் வீரர்கள் வரக்கூடும். ஆனால் எந்த இந்திய கேப்டனாலும் 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது. அது எப்போதும் தோனியின் நிரந்தர சாதனையாக இருக்கும்” என கூறியிருந்தார்.
தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு பிறகு சமூக வலைதளங்களில் தோனி பற்றி விமர்சிக்கும் கம்பீர் இப்படி கூறியிருப்பதால் வைரலாகி வருகிறது. மிஸ் யூ தோனி போன்ற ஹேஸ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றன.
"I don't think any Indian captain would be able to achieve 3 ICC trophies like MS Dhoni. And I Can bet that's gonna stay forever " Gautam Gambhir on @msdhonipic.twitter.com/BFvhkmSLVv
— (@StanMSD) November 11, 2022