கீழே விழ இருந்த கோப்பையை கேட்ச் பிடித்த கேன் வில்லியம்சன்! (விடியோ)
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன.
டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.
ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் டி20 தொடர் தொடங்கும் முன்பு வெலிங்டன் நகரில் இரு அணிகளின் கேப்டன்களும் கோப்பையின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அப்போது பலத்த காற்றினால் கீழே விழ இருந்தது டி20 தொடருக்கான கோப்பை. இதைப் பார்த்த வில்லியம்சன், உடனடியாக அதைக் கையால் பிடித்து கீழே விழாமல் பார்த்துக்கொண்டார். மேலும் கோப்பையை நானே வைத்துக்கொள்கிறேன் என்றவாறு பாண்டியாவிடம் சைகையில் சொன்னார். இந்தச் சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.
Related Article
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: ஆஸி. கேப்டன் விளக்கம்
மயங்க் அகர்வாலை விடுவித்த பஞ்சாப் அணி: பரிதாபப்படும் மஞ்ச்ரேக்கர்
டி20 தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!
கேன் வில்லியம்சனை குஜராத் அணி தேர்வு செய்யுமா?
கடைசி ஓவரை வீச இந்திய பந்துவீச்சாளர்கள் பயந்தார்கள்: சோயிப் மாலிக்
ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள் யார் யார்?