கேன் வில்லியம்சனை குஜராத் அணி தேர்வு செய்யுமா?
By DIN | Published On : 16th November 2022 02:27 PM | Last Updated : 16th November 2022 02:27 PM | அ+அ அ- |

சன்ரைசர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கேன் வில்லியம்சனை குஜராத் அணி தேர்வு செய்யுமா என்கிற கேள்விக்கு ஹார்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார்.
டிசம்பர் 23 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், பிராவோ உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் ரூ. 14 கோடிக்கு வில்லியம்சனைத் தக்கவைத்த சன்ரைசர்ஸ் அணி இந்தமுறை விடுவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டிய நிலைமை கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் வில்லியம்சன். அந்த அணி, 14 ஆட்டங்களில் 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது. வில்லியம்சன் 13 ஆட்டங்களில் 216 ரன்கள் எடுத்தார்.
சன்ரைசர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கேன் வில்லியம்சனை குஜராத் அணி தேர்வு செய்யுமா என்கிற கேள்விக்கு இந்திய டி20 அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியா பதில் கூறியதாவது:
எனக்குத் தெரியாது. இப்போதே இதைப் பற்றி நினைக்க வேண்டுமா? வில்லியம்சன் எனக்கு நண்பர். அது ஐபிஎல். இப்போது நான் இந்திய அணிக்காக விளையாடுகிறேன் என்று கூறியுள்ளார்.