ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள் யார் யார்?

2022 ஐபிஎல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்களில் யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்...
எம். அஸ்வின்
எம். அஸ்வின்

டிசம்பர் 23 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், பிராவோ உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

2022 ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். 2022 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 13 தமிழக வீரர்களை அணிகள் தேர்வு செய்தன. ஏலத்துக்கு முன்பு, தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. ஐபிஎல் ஏலத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளிலிருந்து தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வானார்கள். ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி. அடுத்த இடத்தில் ராஜஸ்தான். 9 வீரர்கள் ரூ. 33.45 கோடிக்குத் தேர்வானார்கள். 

இந்நிலையில் 2023 போட்டிக்கான ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதையடுத்து 2022 ஐபிஎல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்களில் யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள், யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று பார்ப்போம்.

2023 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள்

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்

1. எம். அஸ்வின் (மும்பை)
2. சஞ்சய் யாதவ் (மும்பை)
3. என். ஜெகதீசன் (சிஎஸ்கே)
4. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)
5. பாபா இந்திரஜித் (கேகேஆர்) 

விடுவிக்கப்பட்ட 5 வீரர்களுடன் சேர்த்து மேலும் சில தமிழக வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாக வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com