டி20 உலகக் கோப்பை: முறியடிக்க முடியாத விராட் கோலியின் சாதனை

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் எந்த வீரராலும் கோலியின் சாதனையைத் தாண்ட முடியவில்லை.
டி20 உலகக் கோப்பை: முறியடிக்க முடியாத விராட் கோலியின் சாதனை

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற விராட் கோலியின் சாதனையை இந்தமுறையும் எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண். 

இந்தியாவின் விராட் கோலி 296 ரன்கள் எடுத்து, 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

2014 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி 6 இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தார். 2009-ல் இலங்கையின் தில்ஷன் எடுத்த 317 ரன்களைக் கடந்து டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் கோலி. 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தின் தமிம் இக்பால் அதிகபட்சமாக 6 இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 6 இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்தார்.

இதனால் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் எந்த வீரராலும் கோலியின் சாதனையைத் தாண்ட முடியவில்லை. கோலி தனது சாதனையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.  

டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள்

319 ரன்கள் - விராட் கோலி (2014)
317 ரன்கள்: தில்ஷன் (2009)
303 ரன்கள்: பாபர் ஆஸம் (2021)
302 ரன்கள்: ஜெயவர்தனே (2010)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com