டி20 கிரிக்கெட்டை எப்படி அணுகுவேன்?: ஷுப்மன் கில் பதில்

டி20 கிரிக்கெட்டில் பந்துகளை வீணடிக்காமல் ஆடுவேன் என இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டை எப்படி அணுகுவேன்?: ஷுப்மன் கில் பதில்

டி20 கிரிக்கெட்டில் பந்துகளை வீணடிக்காமல் ஆடுவேன் என இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஷுப்மன் கில் கூறியதாவது:

டி20 கிரிக்கெட் என்பது சிக்ஸர்களும் பவுண்டரிகளும் மட்டும் அடிப்பது அல்ல. ஒரு தொடக்க வீரராக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன். பந்துகளை வீணடிக்காமல் ஒரு ரன், இரு ரன்கள், பவுண்டரிகள், சிக்ஸர்கள் என எடுக்கப் பார்ப்பேன். எப்போதும் பந்தை அடிக்க முயல்வதற்குப் பதிலாகப் பந்தைக் கணித்து அதன்படி ரன்கள் எடுப்பேன். டி20 கிரிக்கெட்டில் சில விஷயங்களை முயற்சி செய்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்தன. சிக்ஸர் அடிப்பது வலுவை மட்டும் நிரூபிப்பதல்ல. டைமிங் மற்றும் பந்தை எப்படி அடிப்பது என்கிற விஷயங்களும் அடங்கியிருக்கிறன. பந்தை என்னுடைய பேட் எப்படி எதிர்கொள்கிறதோ அதற்கேற்றபடி என்னால் சிக்ஸர் அடிக்க முடியும். நியூசிலாந்தில் எப்போது விளையாட வந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com