மற்ற வீரர்களுடன் இணைந்து கால்பந்து விளையாட்டில் ஈடுபடாதது ஏன்?: வாஷிங்டன் சுந்தர் பதில்

ஒரு வினோதமான சம்பவம் 5, 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது.
மற்ற வீரர்களுடன் இணைந்து கால்பந்து விளையாட்டில் ஈடுபடாதது ஏன்?: வாஷிங்டன் சுந்தர் பதில்

பயிற்சியின்போது இந்திய அணி வீரர்களுடன் இணைந்து கால்பந்து விளையாட்டில் ஈடுபடாதது குறித்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பதில் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணி வீரர்கள் உள்அரங்கில் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டார்கள். நான் பங்கேற்கவில்லை. ஒரு வினோதமான சம்பவம் 5, 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. ஒரு முக்கியமான சுற்றுப்பயணத்துக்கு முன்பு நான் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டபோது என்னுடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இனிமேல் என் வாழ்க்கையில் ஒருபோதும் கால்பந்து விளையாடக் கூடாது என அப்போது உறுதியெடுத்துக் கொண்டேன். கால்பந்து விளையாட்டில் ஈடுபடுவதற்குப் பதிலாக வேறு பயிற்சிகளில் ஈடுபடலாம். அழகான நியூசிலாந்து எனக்கு மிகவும் பிடித்த நாடு. மக்கள் அன்பாகப் பழகுவார்கள். இங்கு வந்ததில் இருந்து பலவிதமான உணவகங்களுக்குச் செல்கிறோம். சாலைகளில் நடக்கிறோம். இங்குக் கிடைக்கும் காஃபி அபாரமாக உள்ளது. இங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல் நாங்கள் நினைத்ததைச் செய்யலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com