எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முத்தரப்பு டி20: நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி.

News image
பாபர் ஆஸம் (கோப்புப் படம்)
Updated On :8 அக்டோபர் 2022, 11:18 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி.

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கான்வே 36, சாப்மேன் 32 ரன்கள் எடுத்தார்கள். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. அதன்பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. 15-வது ஓவரில் 22 ரன்கள் எடுத்த நியூசிலாந்து கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

ஆரம்பம் முதல் நன்றாக விளையாடினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். ரிஸ்வான் 4 ரன்களிலும் ஷான் மசூத் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பாபரும் ஷதாப் கானும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். இதனால் 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து இப்போட்டியில் 2-வது வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான் அணி. ஷதாப் கான் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாபர் ஆஸம் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.