மகளிர் ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள்!

இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலிடம் முதலிடம் பிடித்துள்ளார்கள். 
ஜெமிமா
ஜெமிமா

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலிடம் முதலிடம் பிடித்துள்ளார்கள். 

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி. 

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி. இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. இந்திய மகளிர் அணி பெரிய சிரமம் இல்லாமல் 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீராங்கனை மந்தனா 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 

இறுதி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங்கும் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக இந்தியாவின் ஜெமிமாவும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இந்தியாவின் தீப்தி சர்மாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

அதிக ரன்கள்

1. ஜெமிமா ரோட்ரிகஸ் (இந்தியா) - 217 ரன்கள்
2. ஹர்ஷிதா (இலங்கை) - 202 ரன்கள்
3. ஷெஃபாலி வர்மா (இந்தியா) - 166 ரன்கள்
4. சிட்ரா அமீன் (பாகிஸ்தான்) - 158 ரன்கள்
5. நிடா டர் (பாகிஸ்தான்) - 145 ரன்கள்

அதிக விக்கெட்டுகள்

1. தீப்தி சர்மா (இந்தியா) - 13 விக்கெட்டுகள்
2. இனோகா ரணவீரா (இலங்கை) - 13 விக்கெட்டுகள்
3. ருமனா அஹமது (வங்கதேசம்) - 10 விக்கெட்டுகள்
4. ஒமைமா சோஹைல் (பாகிஸ்தான்) - 10 விக்கெட்டுகள்
5. ராஜேஸ்வரி (இந்தியா) - 9 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com