டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த தமிழர்!
By DIN | Published On : 18th October 2022 03:13 PM | Last Updated : 18th October 2022 03:13 PM | அ+அ அ- |

படம் - www.instagram.com/karthikmeiyappan/
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.
முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் தோற்ற இலங்கை அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றதால் இப்போட்டியில் முதல் வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் 15-வது ஓவரில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பனுகா, அசலங்கா, தசுன் ஷனகா என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து சாதனை செய்தார். 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன். 2012 முதல் துபையில் வசித்து வருகிறார். ஐபிஎல் போட்டிக்காக ஆர்சிபி அணியுடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக விளையாடி ஹாட்ரிக் எடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...