புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த தமிழர் (விடியோ)

2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன்.

News image

படம் - www.instagram.com/karthikmeiyappan/

Updated On :18 அக்டோபர் 2022, 10:49 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை அணி.

முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் தோற்ற இலங்கை அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றதால் இப்போட்டியில் முதல் வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

14-வது ஓவர் வரை பெரிய பாதிப்பில்லாமல் பேட்டிங் செய்தது இலங்கை. 14-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரில் மறக்க முடியாத ஓவரை வீசினார் ஐக்கிய அரபு அமீரக அணியில் விளையாடும் தமிழரான கார்த்திக் மெய்யப்பன். 

இந்த ஆட்டத்தின் 15-வது ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பனுகா, அசலங்கா, தசுன் ஷனகா என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து சாதனை செய்தார் கார்த்திக் மெய்யப்பன். 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன். 2012 முதல் துபையில் வசித்து வருகிறார். ஐபிஎல் போட்டிக்காக ஆர்சிபி அணியுடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக விளையாடி ஹாட்ரிக் எடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.