டி20 போட்டி: சச்சின் தலைமையிலான அணி அறிவிப்பு

சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டிக்கான சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டி: சச்சின் தலைமையிலான அணி அறிவிப்பு

சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டிக்கான சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் என்கிற டி20 போட்டி, 2020 முதல் நடைபெற்று வருகிறது. முதல் பருவம் கடந்த வருடம் நிறைவுபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. 

கடந்த வருடம் ராய்ப்பூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. கடந்த வருடப் போட்டியில் கலந்துகொண்ட பிறகு சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் இந்த வருட சாலைப் பாதுகாப்பு டி20 போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாள்களுக்கு நடக்கும் இந்தப் போட்டி செப்டம்பர் 10 முதல் தொடங்குகிறது. கான்பூரில் முதல் ஆட்டமும் அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்கள் ராய்பூரிலும் நடைபெறவுள்ளன. அக்டோபர் 1 அன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பிரையன் லாராவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சனும் இங்கிலாந்து அணிக்கு ஐயன் பெல்லும் நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  

சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவ்ராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனவ் படேல், பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), கோனி, பிரக்யான் ஓஜா, வினய் குமார், அபிமன்யூ மிதுன், ராஜேஷ் பவார், ராகுல் சர்மா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com