

2023 ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
2023 ஜனவரியில் ஒடிஷாவில் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் ஒவ்வொரு நாடும் எந்தப் பிரிவில் இடம்பெறுகிறது என்பதற்கான முடிவு இன்று எடுக்கப்பட்டது.
மொத்தமுள்ள 4 பிரிவுகளில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான பெல்ஜியம் பி பிரிவில் ஜெர்மனி, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இணைந்துள்ளது.
2023 உலகக் கோப்பைப் போட்டி ஒடிஷாவில் ஜனவரி 13 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. 2018-ல் ஒடிஷாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று முறை சாம்பியனான நெதர்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது பெல்ஜியம் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.