ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்: ஜெயவர்தனே

காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இலங்கை கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:51 pm IST

காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இலங்கை கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆசியக் கோப்பையில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பெரிதும் தடுமாறியது அனைவரும் அறிந்ததே. டி20 உலகக் கோப்பை அணியில் ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்கு காரணம். 

இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது: 

நம்பர் 5இல் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இடது கை பேட்டர் என்பதால் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்திடம் மாறினார்கள். நம்பர் 4, 5 இடத்திற்கு யாரை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கிறது. ஜடேஜா இருந்த ஃபார்மிற்கு அவரை இந்த இடங்களில் பயன்படுத்தலாம். பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பான வீரர் ஜடேஜா இல்லாதது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய இழப்புதான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.