மும்பை இந்தியன்ஸ்: தலைமை பயிற்சியாளரானார் மார்க் பெளச்சர்! 

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மார்க் பெளச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மார்க் பெளச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல்லில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், ஐஎல்டி20யில் விளையாடும் எம்ஐ எமிரேட்ஸ், எஸ்ஏ 20யில் விளையாடும் எம்ஐ கேப் டவுன் ஆகிய மூன்று டி20 அணிகளின் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக ஜெயவர்தனே செயல்படவுள்ளார். மூன்று அணிகளுக்கான பயிற்சியாளர்களின் பணிகள், அணிகளுக்கான வீரர்களின் தேர்வு போன்றவற்றை அவர் கவனித்துக் கொள்வார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராக இருந்த ஜாகீர் கான், தற்போது மூன்று டி20 அணிகளுக்கான கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

2017 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார் ஜெயவர்தனே. இக்காலக்கட்டத்தில் மும்பை அணி மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றது. ஆறு ஆண்டுகளில் மூன்று முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

கடைசி இரண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக விளையாடியது. 2022 தொடரில் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஜெயவர்தெனேவுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டதால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்டர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 

2019 டிசம்பர் முதல் தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் முன்னாள் வீரர் மார்க் பெளச்சர். 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக நீடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக பெளச்சர் முடிவெடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்ததும் குறிபிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்க்கு பவுச்சரின் வருகை மதிப்பு மிக்கதாக இருக்குமென ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com