மும்பை அணியின் இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கப் போகிறது: சுனில் கவாஸ்கர்

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக் கணக்கை தாமதமாக தொடங்கிய நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
மும்பை அணியின் இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கப் போகிறது: சுனில் கவாஸ்கர்

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக் கணக்கை தாமதமாக தொடங்கிய நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், மும்பையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது சுவராசியமாக இருக்கப்போகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்கான இன்றையப் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது. தொடர் தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தங்களது உள்ளூர் மைதானத்தில் விளையாடுகிறது. அவர்கள் எப்படி தங்களது வெற்றிப் பயணத்தை தொடரப் போகிறார்கள் என்பது சுவாரசியமாக இருக்கப் போகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com